Sunday, September 9, 2012

கரிசலாங்கன்னிக் கீரை



கரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்து மிகுந்திருக்கிறது.பல்,ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.தலைமுடி உதிர்தல் காணாமல் போகும்,முடி நரைக்காது.இரத்தம் சுத்தமடையும்.மது,சிகரெட் நச்சினை உடலில் இருந்து நீக்கும்.
தூதுவேளை : சளி,இருமல்,சுவாசம் சம்பந்தமான நோய்களை விரட்டும்.வாதம்,பித்தம்,கபம் பிரச்சினைகளை விரட்டியடிக்கும், நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும்.உடலுக்கு பொன்னிறத்தை கொடுக்கும்.

முசுமுசுக்கை : சளி,இருமல்,இறைப்பு,மூச்சிறைப்பு ஆகியவற்றை விரட்டும் ஆற்றல் உண்டு.

சீரகம் : உடலுக்கு குளிர்ச்சி தரும்,சீரணத்தை தூண்டும், உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்ணை குணமாக்கும்.

மேலே கூறிய இந்த நான்கு பொருட்களையும் அதாவது கரிசாலை,சீரகம்,தூதுவேளை,முசுமுசுக்கை ஆகிய நான்கையும் பொடித்து சூரணமாக்கி முறையே 8 : 4: 2 என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து அதில் இந்த சூரணத்தை போட்டு காய்ச்சி ஒரு தம்ளராக சுண்டியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரை,அல்லது பனைவெல்லம்,அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் அருந்தி வந்தால் நோய்கள் காணாமல் போகும்,உடல் வலுவடையும்,எந்த நோயும் நம்மை அணுகாது.

இந்த கரிசாலைப்பால் மட்டுமே காலை உணவாகப்போதும் என்கிறார் வள்ளலார்.பசி தாங்கமுடியாதவர்கள் இதனுடன் ஒரு பேயன் பழம் சாப்பிடலாம். இந்த கரிசாலைப்பால் கொழுப்பை குறைப்பதையும்,ஊளைச்சதையை குறைத்து உடலை மெலிய வைப்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.அலர்ஜி,ஈஸ்னோபிலியா தொல்லையில் இருந்தும் குணம் பெற்றேன்.

இதை நான் 6 வருடங்களுக்கு முன்மனித உரிமை ஆர்வலர் பேராசியர்.கல்யாணி(பிரபாகல்விமணி) அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.அவர் இன்று வரை கரிசாலைப்பாலை காலை உணவாக அருந்தி சுறுசுறுப்புடன் செயல்படுவதாக கூறுகிறார்.இதனால் எனக்கு ஒரு நன்மை என்னவெனில் இந்த கரிசாலைப்பாலை தயாரிக்க எனக்கு தேவையான பொடிகளை பேராசிரியரிடம் இருந்தே நான் பெற்றுக்கொள்கிறேன்.

மாதம் நூறு ரூபாய் செலவில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன ஒரு அற்புதமான வழிமுறையை வள்ளலார் உருவாக்கியிருக்கிறார் பாருங்கள்.

உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் நச்சு கலந்து விட்ட இந்த காலத்தில் கரிசாலைப்பால் அருந்தி வளமுடன் வாழ தயாராவோமா?.

No comments:

Post a Comment