தகவல்
24 பதில்கள்
- 6 01 2009
- Nithil (07:09:16) :I am proud to say that i am one of the readers of your articles about Dr. Ambedkar. I am ready to buy and wear (wholeheartedly) the Ambedkar T-Shirt (though i do not have the habit of wearing T-Shirts that has prints of leaders’ photos). I sincerely appreciate your good work. Nithil
- 6 01 2009
- யாரோ (07:35:31) :///டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர். /// I expected this… …. But what I didn’t expect is you would announce this… Good that you announced this ‘கேடுகேட்ட நிலை’. இதையெல்லாம் மீறித்தான் நாம் போராட வேண்டியுள்ளது….
- 6 01 2009
- யாரோ (07:45:38) ://அருந்ததயிர் சமூகம் உட்பட எல்லா தாழ்த்தப்பட்ட மக்களின் துயரங்களையும் புரிந்திருந்தார். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத்தான் டாக்டர் அம்பேத்கரின் குரல் இருந்தது. அதனால்தான் அவரை இந்தியாவில் இருக்கிற அனைத்து தலித் மக்களும் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்தச் சிறப்பு தலித் தலைவர்களிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் மட்டுமே இருந்து. காரணம் ஜாதி என்பது பொய். ‘பிறப்பால் ஜாதி பார்ப்பதும், தன்னை ஜாதியாக உணர்வதும் 2000 ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய பழக்கம்’ என்கிற கண்ணோட்டம் அவரிடம் உறுதியாக இருந்தது. அதனால்தான் ஜாதிகளுக்கு எதிரான புத்தரை தனது முன்னோடியாக கொண்டார்.// இங்கே சில கேள்விகள் எழுகின்றன. சாதி ரீதியாக உணர்வது வேண்டாம் என்று கூறீயவர் அம்பேத்கர. அப்படிப்பட்ட தலித் விடுதலை போராட்டம் என்பது பார்ப்பனியத்தின் விதிமுறைக்கு உட்பட்டு போராடும் மோசடி என்பதுதான் எனது கருத்தும். ஆனால் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு போராடுபவர்கள் தலித் என்ற அடையாளத்துடன் மட்டும்தான் ஒன்று சேர முடியும் என்று அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதை நாம் எப்படி பார்ப்பது? இது பார்ப்பனியத்தின் வரையறையிலிருந்து கொண்டே நமது விடுதலையே வென்றெடுக்க போராடுவது ஆகாதா? அப்புறம் அம்பேத்கரின் அஹிம்சா வழி போராட்டம் குறித்து, அதாவது பார்ப்பனிய அதிகாரத்துவத்தால் கெட்டி தட்டி போன இந்த அரசை தூக்கியேறிவதில் அம்பேத்கர் உடன்படாமல் இருந்த நிலை குறித்து உங்களது விமர்சனம் என்ன? குறீப்பாக வன்முறயை அவர் எதிர்த்து நின்றது குறித்து விமரசனமும், அம்பேத்கர் கடைசி காலங்களீல் தனது அரசியல் திசை வழி குறித்து வருத்ததுடன் குறிப்பிட்டவை குறித்த விமர்சனத்தையும் உங்களிட எதிர்பார்க்கிறேன். அம்பேத்கர் நமது தலைவர் என்ற போதும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதனை எழுப்ப இது சரியான தளமா என்ற சந்தேகம் இருந்தபடியால்தான் இந்த தொடர் கட்டுரையில் இதனை பேசவில்லை. ஆனால் அம்பேத்கரை புறக்கணிக்கும் அவலம் வெளிப்படையாக தெரிந்த பிற்பாடு இந்த விசயங்கள் பேசப்பட்டே தீர வேண்டும் என்று உணர்கிறேன். இது மட்டும்தான், இப்படிப்பட்ட விவாதம்தான் அம்பேத்கரின் வீரியமான அரசியலை நாம் மீட்டெடுத்து நமது விடுதலை போராட்டத்தை கூர்மைபடுத்த உதவும். யாரோ
- 6 01 2009
- 6 01 2009
- விஜய் (09:29:37) :ஆனந்த விகடனின் யோக்கியதை ஆனந்த விகடன் இதழ் அம்பேத்கர் குறித்து நீங்கள் முதல் அத்தியாயத்தில் எழுதிய பகுதியை அப்படியே எடுத்து ஒரு வாசகரின் பெயரில் பிரசரித்துள்ளது. அதில் உங்கள் பெயரையோ உங்கள் வலைப்பூ முகவரியோ அதில் படித்தது என்றோ குறிப்பிட வில்லை. இது தான் ஆனந்தவிகடனின் யோக்கிதையா?. இது மட்டுமல்லாமல் பல வலைப்பூ பக்கங்களின் அறிமுகம் செய்கிற விகடன் பக்கத்தில் உங்கள் வலைப்பூ இது வரை வந்ததில்லை. நீங்கள் விகடனை கடுமையாக விமர்சனம் செய்வதுதான் அதற்கு காரணமா?
- 6 01 2009
- சதிஸ் (10:13:09) ://தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. // ஆம் தோழர் நான் ஒரு மாததற்கு முன் கீற்று என்ற இனையதளத்தில் உங்கள் கேள்வி-பதில் வருகிறது என்று ஆசிரியர் பக்கத்தில் அறிமுகம் பார்த்தேன் பிறகு உங்கள் கேள்வி-பதிலும் வரவில்லை அந்த அறிவிப்பையையும் காணவில்லை. என்ன ஆயிற்று கீற்று முற்போக்கு தளத்திற்கு?. சதிஸ் சுவிஸ்
- 6 01 2009
- செ.தமிழ்ச்செல்வன் (15:17:27) :வணக்கம் தோழர், பொதுவாகவே நம் எழுத்தாளர்கள் பலர் ஒரு தொடரை எழுதும்போது அதை வாசகர்கள் குறைவாக படிக்கிறார்கள் என்றால் விரைவாக அந்த தொடரை முடிதுக்கொல்வர்கள்.ஆனால் நீங்கள் அதை பற்றிஎல்லாம் கவலைகொள்ளாது எழுதியது என்பது மிக அறிய நல்ல செயல். இப்படிக்கு, செ.தமிழ்ச்செல்வன்
- 7 01 2009
- தமிழ் ஓவியா (01:44:15) ://டாக்டர் அம்பேத்கர்-தந்தை பெரியார் இருவரிடமும் சுயஜாதி அபிப்பராயம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் ஜாதியை துளியும் நம்பியதில்லை. அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீவிரமாக போராட முடிந்தது. அவர்களால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் வெற்றியும் பெறமுடிந்தது. // சரியாக முடித்திருக்கிறீர்கள். சிறந்த தொடர். நூலாக வெளியிடவும். நன்றி.
- 7 01 2009
- சதுக்கபூதம் (04:33:22) :ஒடுக்க பட்ட மக்களுக்காக அம்பேத்கார் போராடிய அளவுக்கு யாரும் ஆதிக்க சக்தியை எதிர்த்து போராடியிருக்க முடியாது. ஆனால் அவர் மொழி ரீதியாக பிறறை ஆதிக்கம் செலுத்துவதை ஆதரித்தது தவறான செயல் http://www.tribuneindia.com/2003/20031220/windows/main4.htm
- 7 01 2009
- பெரியாரிஸ்ட் (05:49:45) :அய்யா ! தங்களின் “அம்பேத்கர் T.shirt” அணிவது தொடர்பான கட்டுரையின் ஒரு பகுதியை எனது http://muzhangu.wordpress.com ல் “அம்பேத்கர் என்றவுடன் அடி வயிறு எரியுதடா” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.நன்றி.
- 7 01 2009
- kalagam (16:08:55) :டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர்” வணக்கம், பார்ப்பனீயத்துக்கெதிரான போரில் நாம் இன்னமும் நிறையவே இழக்க வேண்டியிருக்கின்றது த்ன் மானத்திற்காக சுய மரியாதைக்காக தந்தை பெரியார் சந்தித்த இழப்புகள் ஏராளம்.ஆனால் அவை இழப்புகளாக எடுத்துக்கொள்ளவில்லை பெரியாரும் சரி மற்றும் புரட்சியாளர்கள் அதை பெருமையாகவே எண்ணினர்.தோழர் மதிமாறன் அவர்களே பெருமைகொள்ளுங்கள் நீங்கள் களத்தில் நிற்கிறீர்கள். தந்தை பெரியார் கடவுளின் சிலையை அடித்தாரே அந்த செருப்பு மீண்டும் தேவைப்படுகின்றது பார்ப்பனீயத்துக்கெதிராக அது பார்ப்பனீய களமாக மட்டுமிருந்தால் பார்ப்பனீயத்தை வீழ்த்த முடியாது வாருங்கள் வர்க்கபோரில் ஒன்றாய் களம் புகுவோம்.ஏனெனில் பார்ப்பனீயமும் மறுகாலனியும் பின்னிப்பிணைந்த பாம்புகள் கலகம்
- 7 01 2009
- பாக்கியராசன் சேதுராமலிங்கம் (22:36:06) :நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்?… தலிதுகளுக்காகவா இல்லை தமிழினத்துகாகவா? உங்கள் எழுத்துகளை யார் படிக்க வேண்டுமோ, யாரின் குற்ற உணர்ச்சியை வெளி கொண்டுவது நீங்கள் அரவணைக்க வேண்டுமோ அவர்களை வசை பாடுங்கள்.. நன்றாக வந்து உங்கள் பக்கங்களை படிப்பார்கள்… முற்போக்காளர்களையும், பிற்படுத்தவர்களையும் நீங்கள் வசை பாடியவுடன் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற்றுவிடுமா? இல்லை தலித் மீதான அடக்குமுறை தான் நின்றுவிடுமா?.. யார் நண்பன், யார் எதிரி என்று அறிந்துகொள்ள தெரியாத மூடராய் இருக்கும் காரணத்தினால் தான் உங்களை புறக்கணிக்கின்றனர் என்பது என் கருத்து… உங்கள் எழுத்தை தீவிரமாய் படித்து, இந்த தொடர் எழுதிய பின் வெறுத்த, ஒரு பிற்படுத்தப்பட்ட முற்போக்குவாதி.. பாக்கியராசன் சேதுராமலிங்கம்
- 8 01 2009
- ந.செந்தில் (12:23:38) ://இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.// அற்புதமான ஒரு தொடர் முடிந்து விட்டது. வலை பகுதியின் பார்வையாளர்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதிகமானவர்கள் படித்து பயனுறாமல் போவதை விட, குறைவானவர்கள் படித்து பயனுருவதே மேல்.
- 10 01 2009
- லிவிங் ஸ்மைல் (02:43:48) :புறக்கணித்த தளங்களை பட்டியலிட்டால், அவற்றை புறக்கணிக்க எனக்கு ஏதுவாக இருக்கும். கண்டிப்பாக புத்தகமாக வரவேண்டிய தொடர். அதிகம் படித்திராத எனக்கு இது பல புது தகவல்களை தந்து உதவியது. பல ஈடுஇணையற்ற பணியாற்றிய அம்பேத்கருக்குள்ள இத்தகைய ஆதரவின்மையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
- 10 01 2009
- Dr. V. Pandian (03:56:36) :மதிமாறன் அவர்களே உங்களது கருத்துகள் எல்லாம் சரிதான். ஆனால், இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம். என்ற உங்களின் நிறைவுப் பத்தியைப் படித்து அதிர்ந்து போனேன். ஆக, உங்களிடமும் அரசியல் உள்ளதென்பது தெளிவு. தமிழ்த்தேசியம் பேசுவது தவறா? பெரியார் தி.க தமிழ்தேசியத்திற்கெதிரானது என்பது எனக்குத் தெரியும். உங்களின் தனிப்பட்ட எண்ணமும் அது தானா? இது கொடுமையல்லவா? ஒரு சில தமிழ்தேசிய வாதிகள் பெரியாரை கன்னடரென்று வாதிக்கலாம். தமிழக எல்லைப் போராட்டங்களில் பெரியார் கவனம் செலுத்தவே இல்லை என்பது போன்ற சில ஞாயமான விமர்சனங்கள் உண்டுதான். ஆனால், பெரும்பாண்மை தமிழ்த்தேசிய வாதிகள் பெரியாரை நேசிப்பவர்கள் தாம். அவரிடம் நன்றி பாராட்டுபவர்கள் தாம். உங்களைப் புரக்கனித்தவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிடவில்லை. ஆனால், தமிழ்த்தேசிய வாதிகளை இப்படிக் கொச்சைப் படுத்தலாமா? கடைசியாக, நீங்களும் கன்னடரென்று (தெலுங்கரென்று) சொல்லிக் கொள்வீர்களா? இப்படி உங்களது கட்டுரையை முடிப்பது உங்களுக்கு அபத்தமாக தெரியவில்லையா? உங்களது கருத்துக்கு எதிராகவே நீங்களே பேசுவது போல் உங்களுக்கு தெரியவில்லையா? ஈ. வி.கெ.ஸ் இளங்கோவன் சொல்கிறார், ‘தமிழகத்தில் தமிழர் மட்டும் இல்லை அதனால், சென்னை உயர்நீதி ம்ன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆகக்கூடாது’ என்று. இவர் ஓட்டுக் கேட்க பயன்படுத்தும் மொழி தெலுங்கல்ல, தமிழ். ஆனால், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகக் கூடாதாம். எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்! பெரியாரின் சொந்தத்தில் இப்படி ஒரு அபத்தப்பிறவி! மதிமாறன் அவர்களே! நீங்களும் இப்படிப்பட்டவரா? இந்தியா தற்போது ஒரே நாடுதான். ஆந்திராவுக்கோ, கர்நாடகாவுக்கோ சென்று வாழலாமே! வந்தேறிகளால் தமிழன் பட்டதெல்லாம் போதுமய்யா! நீங்கள் பெரியாரைப்பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் படித்தது போல, தமிழர் வரலாற்றையும் சற்றே படியுங்களேன். இந்த இனத்தின் மீது சற்று இறக்கம் கொள்ளுங்கள். தமிழ்த் தேசியம் பிறந்தே தீரும். ஈழமக்களின் படுகொலையே அதற்கொரு உத்வேகமாக அமையும். மொழிக்கொரு தேசம் இன்றியமையாதது. ஞாயமானது. அதை எவன் மறுக்கிறானோ அவன் ஒரு அயோக்கியன்.
- 11 01 2009
- 11 01 2009
- Dr. V. Pandian (19:01:12) :திரு. விஜயகோபால்சாமி அவர்களே! நான் ச்ற்று உணர்ச்சிவசப்பட்டுத்தான் எழுதினேன். எழுதியவிதம் எனக்கே சற்று சங்கடமாக இருந்தாலும் எழுதியதில் தவறில்லை என்றே கருதுகின்றேன். தமிழனும் சென்றேறிதான். நிச்சயமாக. ஆனால், அவன் எங்காவது அங்குள்ள மக்களின் உரிமைகளில் தலையிட்டுள்ளான் என்று உங்களால் கூற இயலுமா? அதானய்யா தமிழன். ஆனால், இங்கு வந்தேறி இளங்கோவன் சுப. தயிழ்ச்செல்வனின் இறங்கல் பதாகையைக் கிழிக்கிறான். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழிக்காடு மொழியாகக் கூடாது என்கிறான். தங்கபாலு என்ற தெலுங்கன்,தமிழன் தனது ஈழ ரத்த சொந்தங்களுக்கு குரல் கொடுத்தால், சிறை படுத்தச் சொல்கிறான். அதுவும் நடக்கிறது. மணியரசன், சீமான் மற்றும் கொளத்தூர் மணி இப்போது சிறையில்! டிராபிக் ராமசாமி என்ற தெலுங்கு நாய், தமிழ்ப்புத்தாண்டை தையில் மாற்றுவதை எதிர்த்து, நீதி மன்றம் செல்கிறது. இவனுக்கு தமிழனை எதிர்ப்பதே தொழிலாகிவிட்டது. எனது கல்லூரி நன்பன். 30 வருட அண்ணன் தம்பி உறவு. அவனது வீட்டு நிகழ்வுகளுக்கு எனது அண்ணன் தம்பிகளும் சென்று கலந்து கொள்வார்கள். நான் வெளி மாநிலத்தில் கல்வி கற்க சென்ற போதும், எனது குடும்பத்தாரோடு அவனது நட்பு தொடர்ந்திருந்தது. அவன் தெலுங்கன் என்றாலும் அவனை தமிழனாகவே, வெகு இயல்பாகவே பாவித்தோம். தமிழ் செம்மொழியான பொழுதில் அவனை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டபோது, இயல்பாக தமிழுக்கான செவ்வியல் தகுதி பற்றிப் பேச எத்தனித்தேன். அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேச்சை மாற்றினான். நான் முதன் முறையாக அதிர்ந்துபோனேன். அப்போது தான் அவன் ஒரு தெலுங்கன் என்று, 30 வருடங்களுக்கப்புறம், முதன் முறையாக எனக்குப் பட்டது. நான் ஒன்றும் சொல்லவில்லை. சமீபத்தில் அவனை நான் சந்தித்தேன். மீண்டும் ஒரு அதிர்ச்சி. நாத்திகனான அவன் கருத்த நெற்றியில் பளபளக்கும் நாமம். புரிகிறதா அதன் அர்த்தத்தை! அவன் மீதிருந்த கொஞ்சநஞ்ச மறியாதையும் போய்விட்டது. விஜயகோபால்சாமி அவர்களே! தமிழன் மீது மாற்று இனத்தவருக்கு காழ்ப்பு இருக்கிறதையா! இது எதார்த்தம். ஆனால், தெலுங்கனோ, கன்னடனோ, மளையாளியோ அடிப்படையில் தமிழர்களே! தமிழ்ப் பாரம்பர்யத்தில் அவர்களுக்கு பங்குண்டு. தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் வாழும் இவர்களாவது இதை உணரவேண்டாமா? சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் தெலுங்கு ஏது, கன்னடம் ஏது, மளையாளம் ஏது? எல்லாம் தமிழ் தானே. இவற்றை இயற்றியதில் அந்த பகுதி மக்களின் பங்கும் இருந்திருக்குமல்லவா? தமிழ் உலகின் மூத்த மொழி. 1400 ஆண்டுகளே ஆன இம்மொழிகள் இவர்களின் அடையாளமா, இல்லை ஐம்பதினாயிறம் ஆண்டு பழமையுள்ள இவர்களின் பாட்டி மொழியான தமிழ் இவர்களின் அடையாளமா? தமிழகத்தில் வாழும் இவர்களாவது இதை உணர வேண்டாமா? எங்கிருந்தோ வந்த பெஸ்கி தனது பெயரைக்கூட முதலில் ‘தைரியநாதன்’ என்று மாற்றி பிறகு அது வட சொல் என்றறிந்தபின் ‘வீரமாமுனிவர்’ என்று தூயதமிழ்ச் சொல்லால் அழைத்தானே! அப்பேர்பட்ட மொழியையா தமிழ். இவர்கள் தமது பாட்டி மொழியை நேசிக்க வேண்டாமா? நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாமலிருக்க வேண்டாமா? இறுதியாக, தமிழைக் காதலிக்கும் எவரையும் எனது உடன்பிறப்பாகவே கருதுகிறேன். எல்லா தமிழரும் அப்படித்தான் கருதுவார்கள் என்பது திண்ணம். இந்த தன்னிலை வளக்கத்திற்கு காரணமாயிருந்த உங்களுக்கு எனது நன்றிகள் பல.
- 12 01 2009
- Dr. V. Pandian (03:45:59) :இன்னும் ஒரு சிலவற்றை எழுதிவிடுகின்றேன், விஜய்கோபால்சாமி அவர்களே! அம்பேத்கர் கடுமையாக பார்ப்பனீயத்தை எதிர்த்தவர். இந்திய மொழிகள் எல்லாமே, தமிழைத் தவிர, சமஸ்கிருதம் கலந்துள்ளதால் தமிழை மட்டுமே அவர் நேசித்தார். தமிழைக்கற்றவும் முயற்சித்தார். மராட்டியத்தைவிட தமிழின் மீது அவருக்கு மரியாதை இருந்தது. கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளத்தை திட்டமிட்டே உருவாக்கியவர்கள் பிராமனர்கள் தான். வந்தேறிகளான அவர்கள் இந்த மன்னின் மொழி, அடையாளங்கள், வரலாறு போன்றவற்றை அழிப்பதிலே குறியாயிருந்தனர். தமிழை சிதைத்துத் தான் இந்த மொழிகளை உருவாக்கினார்கள். இம்மொழிகளின் முதல் இலக்கண நூல்கள் கூட வடமொழியில் தான் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘திராவிடச்சான்று’ என்ற நூலில் தாமஸ் ட்ரவுட்மன் என்ற அமெரிக்க ஆய்வாளர், தெலுங்குக்கு ஒரு செட்டியார் இலக்கணம் எழுதியதைப் பொருத்துக்கொள்ளாத தெலுங்கு பார்ப்பனர்கள் அந்த செட்டியாரின் வீட்டை இரண்டு முறை இடித்துள்ளனர் என்ற வரலாற்று நிகழ்வை சொல்கிறார். ஆக, கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளம் எல்லாம் பார்ப்பனர்களின் மொழி. இதைக் கொண்டாடுவதில், திராவிட கன்னடனுக்கோ, தெலுங்கனுக்கோ அல்லது மளையாளிக்கோ என்ன பெருமை இருக்கப்போகிறது. தன்னை இழிவு படுத்திய பார்ப்பன மொழியான மராட்டியத்தை விட தமிழை நேசித்த அம்பேத்கரைப் போல, தமிழ் நாட்டில் வாழும் இம்மொழி மக்கள் தங்களது பாட்டி மொழியைக் கொண்டாட வேண்டாமா? நான் அதிகமாக கேட்கவில்லை ஐய்யா, தமிழனைத் தூற்றாதீர் என்று தான் இவர்களைக் கேட்கின்றேன். நான் மொழி வெறியன் அல்ல. ஆனால், உலக மொழி எல்லாம் அழிந்தாலும், தமிழ் வாழவேண்டும். ஏனென்றால் இந்த மொழி உலக மாந்தனின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தை பச்சைத் தமிழன் ஆண்டது வெறும் 8 ஆண்டுகள் தான் (அண்ணாவும், காமராசரும்). மற்ற 53 ஆண்டுகளும் தமிழனை வந்தேறிகள் தானய்யா ஆளுகின்றனர். தமிழனின் சகிப்புத் தன்மைக்கு இது ஒரு வரலாற்றுச் சான்றல்லவா? வந்தேறி கருனாநிதியின் துரோகம் எப்படிப் பட்டது என்று தெரிந்துள்ளதா? தமிழ், தமிழ் என்று தமிழைக் கெடுப்பவர் இவரே! கலைஞர் தொலைக் காட்சியைப் பார்த்தாலே புரியாதா? இவரது ஆட்சியில் தமிழன் நாசமாய்ப் போனது தான் மிச்சம். ஜெயலலிதா என்ற வந்தேறியின் ஆட்சியில் தமிழரெல்லாம் ‘பொடா’ சிறையில்! பக்தவச்சலம் என்ற வந்தேறியின் ஆட்சியில் இந்தியைத் திணிக்க தமிழர் மீது துப்பாக்கிச்சூடு! நூற்றுக்கணக்கானோர் உயிரழப்பு! இப்போது கொள்கை, கோட்பாடு, அறிவு, ஆளுமை எதுவுமே இல்லாத விஜயகாந்த் என்ற தெலுங்கு குடிகாரன் தயாராகிறான். இன்னமும் தமிழனுக்கு சகிப்புத் தன்மை வேண்டுமா? உலகிலேயே சிறந்த இனம் தமிழினம் தான். இந்த மூத்தக் குடியின் இலக்கியத் தாக்கத்தால் உண்டான மன முதிர்ச்சி! அவனிடம் பரிவு கொள்ளுங்கள் என்று தான் விண்ணப்பிக்கின்றோம்.
- 12 01 2009
- Dr. V. Pandian (04:42:24) :ராஜகோபாலாச்சாரி என்ற வந்தேறிப் பார்ப்பனர் 6000 கிராமப்புர பள்ளிக்கூடங்களை மூடினார். மனு தர்மத்தைக் காக்க! இதையெல்லாம் வைத்துத்தான் வந்தேறிகளால் நாங்கள் பட்டதெல்லாம் போதும் என்று எழுதினேன். தமிழ்த்தேசம் பிறந்தால், இங்குள்ள அனைவரும், பார்ப்பனர்கள் உட்பட, அவர்களுக்குரிய சம உரிமைகளோடு அமைதியோடும், அன்போடும், பாசத்தோடும் வாழக்கூடிய தேசமாகத் தான் இருக்கும். இதில் யாருக்கும் ஐயப்பாடு வேண்டாம். தமிழன் என்றுமே தமிழன் தான். என்னுடைய அசைக்கமுடியாத, பட்டறிவால் பெற்ற, ஞாணம் என்ன தெரியுமா? எந்த சூழ்நிலையிலும் நல்லவனாகவே இருந்தால் நீ அழிக்கப்படுவாய். நல்லவனுக்கு நல்லவனாய் இரு! எதிரிக்கு எதிரியாய் இரு! வாழ்வியல் எதார்த்தம் அது தான். தற்காப்பு எதார்த்தம்!
- 12 01 2009
- ந.செந்தில் (12:36:24) :நண்பர் பாண்டியன் அவர்களே “ஒருவர் யாராக இருந்தாலும் அவர் தமிழ் மொழிப்பற்றுடையவராக இருந்தால் நான் அவருக்கு அடிமையே ஆவேன் என்றார் தந்தை பெரியார். அதே போல் உங்கள் மொழிப்பற்றை நான் மதிக்கிறேன். உங்கள் எழுத்துகளை பல இடங்களில் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால்,தமிழர்களாகிய நாம் இப்போது தான் ஓரணியில் ஒன்று திரண்டிருக்கிறோம். எனவே நமக்குள் பிரிவினை வேண்டாம். கருத்துகளை ஆரோக்கியத்துடன் பகிர்ந்து கொள்வோம். தொடர்ந்து உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். -நட்புடன் ந.செந்தில்
- 12 01 2009
- Dr. V. Pandian (18:51:36) :உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் செந்தில்! செவ்வியல் மொழியான தமிழை தமிழனுக்கானதாக மட்டும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை. இந்த வரலாற்றுப் பெட்டகம் அனைவருக்குமானது. அனைத்து உலக மொழிகளின் மூலம் இது. நாவாய் -> Naval Force பின்னு -> ஸ்பின்னு -> Spinning பஞ்சு -> ஸ்பஞ்சு -> Sponge பேச்சு -> ஸ்பேச்சு -> Speach மூலக்கூறு -> Molecule உரையாற்று -> Orate ஆங்கிலத்திற்கான சில சான்றுகளை மட்டும் கொடுத்துள்ளேன். சான்றுகள் ஏறாளம்.
- 12 01 2009
- jp (21:30:51) :டாக்டர் பாண்டியன் அவர்களின் வாதத்தில் உள்ள கருத்துக்களின் மூலம் சில புதிய தகலவல்களை தெரிந்து கொண்டேன் . அவருக்கு மிக்க நன்றி. அவர்களின் கேள்விக்கு மதியுன் பதிலுக்காக காத்திருக்கிறேன் //ஆம் தோழர் நான் ஒரு மாததற்கு முன் கீற்று என்ற இனையதளத்தில் உங்கள் கேள்வி-பதில் வருகிறது என்று ஆசிரியர் பக்கத்தில் அறிமுகம் பார்த்தேன் பிறகு உங்கள் கேள்வி-பதிலும் வரவில்லை அந்த அறிவிப்பையையும் காணவில்லை.// உண்மையிலேயா ?? தயவு செய்து உறுதி படுத்தவும்
- 13 01 2009
- Dr. V. Pandian (04:58:25) :மேலும் சில….. ஜப்பானியர்கள் தந்தையை ஐயா என்கின்றனர். வச்சிரபோதி என்ற காஞ்சி முனிவரின் உதவியால் ஜப்பானிய எழுத்துவடிவம் தமிழின் அடிப்படையில் செம்மைப் படுத்தப்பட்டது. கொரியர்கள் தாயை அம்மா என்று அழைக்கின்றனர். ‘தாய்லாந்தில்’ உள்ள தாய் அன்னைதான். மலேசிய கோலாலம்பூர் தமிழ்ப்பெயர் தான். சிங்கப்பூரும் அப்படியே! பர்மா, இந்தோநேசியா போன்ற பல நாடுகளில் பல ஊர்களின் பெயர்கள் மருவிய தமிழ்ப் பெயர்களே! பரதவர் (மீனவர்) -> பரத்தர் -> பிரத்தர் -> Brittons மூத்தக் குடியான தமிழன் தான் பல தொழில் நுட்பங்களை உலகுக்கு அளித்தவன். ஆரியர்களின் கடவுள் சுரண்டலால், அவர்கள் தங்களது பிழைப்பிற்காக நம்மிள் விதைத்த பிற்போக்குத் தனங்களால், தான் நாம் வீழ்ந்தோம், நம்மிடம் கற்ற கிரேக்கம் வளர்ந்தது. கட்டிடக் கலைக்கு உலகின் முன்னோடி தமிழன். அரசர்களின் கல் தச்சர்கள் தான் கோயல்களைக் கட்டினார்கள். அதிசயிக்க வைக்கும் கோயில்கள். அரசுத் தச்சன் -> ஆர்சி தெக்கான் -> Architect உலோகத் தொழில் நுட்பம் தமிழரால் உருவாக்கப்பட்டது. தாதுப் பொருட்களிடமிருந்து உலோகத்தை பிரித்தெடுக்கும் முறைக்கு ஆதிப்பெயர் கம்மியம் என்பது. கம்மியம் -> கெம்மியஸ் -> Chemistry இடுகாடு என்பது தமிழரின் ஊர்ப்புறத்தில் உள்ளது. ஊர்ப் புற மேடு -> புறமேடு -> பிரமீடு பிரமீட்டைக் கட்டிய தச்சர்கள் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கல் தச்சர்கள் என்ற வரலாற்று ஆதாரம் இருப்பதாக சொல்கிறார்கள். கால்டுவெல் தான் கிரேக்கத்தின் அருசா வும், ஆங்கிலத்தின் Rice ம் தமிழின் அரிசியிலிருந்து பிறந்த சொற்கள் என்று சொன்னவர். தமிழின் தொன்மை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கத்தான் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வைத்துள்ளேன்.
- 13 01 2009
- க.அருணபாரதி (05:26:40) :திரு பாண்டியன் அவர்களே… விசயகாந்தையும் கருணாநிதியையும் வந்தேறிகளாக நாம் வரையறுக்கத் தேவையில்லை. 1956 மொழிவழி மாநிலப் பிரிவிற்கு பின்னர் தமிழகத்தில் குடியேறிய மலையாளி, தெலுங்கர், மார்வாடிகள, குசராத்திகளைத்தான் வந்தேறிகளாக கணக்கில் கொள்ள வேண்டும். அவர்கள் இங்கு வாழ்வதோடு அல்லாமல் தமிழர்களின் தொழில் வணிகங்களின் ஆதிக்கத்தைத் தான் நாம் எதிர்க்கிறோம். தமிழ்த் தேசியவாதிகள் அம்பேத்கரை வெறுப்பவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கபடுவதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் அப்படி கிடையாது. தமிழர்களை பிளவுபடுத்திய பார்ப்பனியத்தை தான் நாம் சாட வேண்டுமே தவிர தமிழர்களை சாதி வேற்றுமைகள் பாராது ஒன்றுபடுத்தும் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பது தீர்வாகாது. பெண் விடுதலையை போல தலித் விடுதலை என்பது தமிழ்த் தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான கூறு என்பதை யாரும் மறுக்கவில்லை. தமிழர்களாகிய நாம் நம்மை நாமே சீர்திருத்தததிற்கு உட்படுத்தியே தலித் விடுதலையை நாம் சாதிக்க இயலும். நாம் நமக்குள்ளேயே பிளவுபட்டால் பார்ப்பனியத்தின் வெற்றியை நாமே ஏற்றுக் கொள்வது போலாகிவிடும். தோழமையுடன், க.அருணபாரதி
No comments:
Post a Comment