Sunday, May 5, 2013


<a href=" http://inruoruthagaval.com/" title=" inruoruthagaval logo"><img class="aligncenter size-full wp-image-867" height="270" src=" http://inruoruthagaval.com/wp-content/uploads/2012/12/inruoruthagaval-LOGO.jpg " width="180" /></a>
http://inruoruthagaval.com/information/

Thursday, May 2, 2013

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை...

நண்பர் Babu pkவின் சிந்தனையும், பதிவும்.


பகவத்கீதை என்பதே நம் புழக்கத்தில் இருப்பதால் அப்படியே குறிப்பிடுகிறேன். ஏனெனில் இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.

1. முதலில் இதன் காலம்.


வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?

மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.

யுகங்கள் ஒரு வரிசைப்பார்வை
சத்ய யுகம் 1,728,000
திரேத யுகம் 1,296,000
துவாபர யுகம் 864,000
கலியுகம் 432,000

நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால் கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?

2. இரண்டாவது, நிகழ்விடம்.


ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படைவீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.

தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660
யானைப்படை 21,870 x 18 = 3,93,660
குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980
காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300

அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படிப் 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?

3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்?


அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது... உபதேசனை கூட இல்லை... ஒரு கேள்வி-பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)

4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம்.

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 - சுலோ 13)

நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?

5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 - சுலோ 21)

சந்திரன் நட்சத்திரமா?

6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ: |
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- சுலோ 70)

எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகிவிட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச்சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?

7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் (அத் 9- சுலோ 23)

அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- சுலோ 30)

23ம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,
30ம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டு சொல்கிறார்?
யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?

8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10- சுலோ 37)

பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்... எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?

இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிளைக்கலாம்.

இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?

Babu Pk

Sunday, April 21, 2013

குறைந்த செலவில் குளிர் சாதனம்.

“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள்!
நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்“ - என்று பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டனர் வீட்டில்.

எனக்கோ ஏ.சி.வைப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை.
உங்கள் முன் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா?
அப்படியானால் இதைப்படிக்கவும்.

ஏ.சி. வைத்தால், ஓர் அறையை இறுகப்பூட்டிக்கொண்டு, சுவாசித்த காற்றையே சுவாசித்துக்கொண்டு, நாளில்பாதியை கழிக்கவேண்டும்.  
அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மை அடிமைசெய்து விடும்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டால், அதிலிருந்து மீளவே முடியாமல் போயிவிடும்.

மேலும், கடுமையான மின்வெட்டு,  
அப்போது என்ன செய்வது?
ஏ.சி.வைத்திருக்கும் நண்பர்களிடம் விளக்கம் கேட்டேன்.  
ஏ.சி.போட்டிருந்தாலும், மின்வெட்டானதும் மின்விசிறியைப் போட்டுக்கொள்வோம். புழுக்கம் தெரியாது, அதற்குள் மின்சாரம் மீண்டும் வந்துவிடும் என்றனர்.

எப்படியிருந்தாலும், ஏ.சி. வாங்க எனக்குச் சிறிதும் விருப்பமேமில்லை.

இருந்தாலும், மாயமானைச் சீதைபொருட்டு ஸ்ரீராமன் பிடிக்கச் சென்றான்.
பார்போற்றும் பரந்தாமனே அப்படிச்செய்துள்ளான்.  
நாமும் நம் மன்னன் காட்டிய வழியில் நடப்பதுதானே நல்லது.
ஏ.சி. வாங்கினால் இல்லம் குளிர்ச்சியாகிறதோ இல்லையோ, இல்லாள் மனம் குளிர்ச்சியாகிவிடும்.

ஆயிரம்தான் இருந்தாலும் எனக்கு மனம் இல்லை.
இயற்கையோடு இசைந்து வாழ வழிதேடியது என்மனம்.
இதற்காகப் பலகோணங்களில் யோசித்தேன்.
கடைசியாக ஒருவழி மனதில் உதித்தது.

1984 ஆம் ஆண்டு மதுரையில் (ரீகல் தியேட்டர் அருகில் உள்ள) ‘ராஜா ரேடியோஸ்‘ என்ற கடைக்கு மதிய நேரம் சென்றிருந்தேன்.  அந்தக் கடையில் ஏ.சி. இல்லை. ஆனாலும் அவ்வளவு வெயிலிலும் புழுக்கமாக இல்லை. 
இதற்குக் காரணம் என்ன என்று முதலாளியிடம் கேட்டேன்?

அவர் கடையின் வாயில் அருகே இருந்த வெண்டிலேட்டர் மின்விசிறியைக்( ventilator fan) காண்பித்தார்.  அந்த மின்விசிறி, கடையில் இருக்கும் வெப்பக்காற்றை வெளியே அனுப்புவதற்குப் பதிலாக, வெளியே உள்ள காற்றை கடைக்குள் அனுப்பும் வகையில் மாற்றி மாட்டிவைக்கப்பட்டிருந்தது.  எனக்குச் சற்று வியப்பாக இருந்தது.
 
 
கடைமுதலாளி ஒருசிறு விளக்கம் அளித்தார்.
“மதியம் 3மணி வரை வெளியில் வெயில் கடுமையாக இருக்கும்.  
பின்னர் சிறிது காற்று வீச ஆரம்பித்துவிடும்.  இதனால் கடைக்குவெளியே வெப்பம் குறைந்துவிடும்.  ஆனால் கடைக்கு உள்ளே புழுக்கமாக இருக்கும்.
எனவே மின்விசிறியை மாற்றியமைத்து, வெளியே உள்ள காற்றைக் கடைக்குள் திருப்பிவிட்டுள்ளேன்.  இதனால் கடைக்குள் புழுக்கமாக இருக்காது“ என்றார்.

முதலாளியின் இந்தத் தொழில்நுட்பத்தை நாமும் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது.

காரைக்குடியில் கடைக்குச் சென்று ஒரு எக்சாஸ்ட்விசிறி வாங்கினேன்.  மின்விசிறி ரூபாய்.1150-00. வயர் ரூபாய்.35-00, சுவிட்சு ரூபாய்.20-00. (மொத்தம் 1205-00) செலவு வந்தது.

வீட்டில் கொண்டு வந்து மாட்டினேன்.
இரவு நேரம் ஆரம்பித்தவுடன், இந்த விசிறியைப் போட்டுவிட்டேன்.
அருமையாக வேலை செய்கிறது.
 

Saturday, April 6, 2013

தமிழ்க் கிறுக்கன் !: "ஒரு குடிகாரனின் உவ்வா"

தமிழ்க் கிறுக்கன் !: "ஒரு குடிகாரனின் உவ்வா": "ஒரு குடிகாரனின் உவ்வா"

வெலவாசிய குறைக்க அரசு மலிவு விலை அம்மா உணவகத்தில் ரேஷன் கடை அரசி
மணக்க மணக்க உணவுகள் தயாரிக்கப் படுக...

Welcome To our Website!

Welcome To our Website!

Tuesday, April 2, 2013

onlytamil.in: இன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட

onlytamil.in: இன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட: சந்தேகப்படும்படியான இணைய தளங்களுக்குச் செல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், பயன்படுத்தும் பிரவுசரை அடிக்கடி நீங்கள் அடிக்கடி சுத்தம...